கிராம சபா கூட்டம் முன்னாள் வார்டு உறுப்பினரை கண்டித்த எம்.எல்.ஏ October 4, 2019
கிராம சபா கூட்டம் முன்னாள் வார்டு உறுப்பினரை கண்டித்த எம்.எல்.ஏ

October 4, 2019

சோழிங்கநல்லூர் தொகுதி பரங்கிமலை ஒன்றியத்திலுள்ள சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் அன்று ஊராட்சி செயலர் புலவர் இராஜேந்திர சேதுபதி முன்னிலையில் கிராம சபா கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இக்கிராம சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் ஏழாவது வார்டு உறுப்பினர் மரியாள் நடராஜ் என்பவர் ஊராட்சி செயலர் புலவர் 
இராஜேந்திர சேதுபதி என்னை மிரட்டுவதால் தகுந்த காவல் துறை பாதுகாப்பு வேண்டும் என காவல் துறையினரை அழைத்து வந்து  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விஷயம் அறிந்த ஊராட்சி தி.மு.க செயலாளர் ஜே.ராஜேந்திரன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜே.எழில் பாண்டியன் போன்றவர்கள் மேற்காணும் விஷயத்தை தி.மு.க சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷுக்கு தெரியபடுத்தியுள்ளார்கள்.
எந்த வித அசம்பா விதமும் நடந்து விடக் கூடாது என கிராம சபா கூட்டத்திற்கு வருகை தந்த எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ-விடம் முன்னாள் வார்டு உறுப்பினர் மரியாள் நடராஜன் ஊராட்சி செயலர் புலவர் ராஜேந்திர சேதுபதி மீது பல்வேறு குற்ற சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
இவைகளை காதில் வாங்கி கொண்டு கிராம சபா கூட்டத்தில் தாமும் ஒருவராக கலந்து கொண்ட எஸ்.அரவிந்த் ரமேஷ் மரியாள் நடராஜன் கூறிய புகார்கள் உண்மையா என இன்னொரு பக்கம் விசாரணை நடத்தியுள்ளார்.
அவ்விசாரணையில் முன்னாள் அ.தி.மு.க-வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவருக்கும்,வார்டு உறுப்பினரான மரியாள் நடராஜனுக்கும் முன் பகை காரணமாக கிராம சபா கூட்டங்களில் முட்டல் மோதல் இருந்து வந்துள்ளது.
 என்பதை மறைத்து ஊராட்சி செயலர் புலவர் ராஜேந்திர சேதுபதி மீது தவறான பொய் புகார் கொடுத்துள்ளார் என்பதை தெரிந்து கொண்ட எஸ்.அரவிந்த் ரமேஷ்   எம்.எல்.ஏ மரியாள் நடராஜை எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார்.
இக்கிராமசபா கூட்டத்தில் மாவட்ட இளைஞரனி துணை அமைப்பாளர் ஜே.எழில் பாண்டியன் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஊராட்சி செயலரிடம் குறைகளை உடனடியாக தீர்த்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.