நாகர்கோவில்: குமரி மாவட்டம், சிதறால், வெள்ளாங்கோடு பகுதியை சேந்தவர் சகரியா. இவரது மகன் ராபின்சன். கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2013ல் திருவட்டார், இரட்டை தெருவை சேர்ந்த ஈசாக்(54) மற்றும் அவரது குடும்பத்தினர் அறிமுகமாகி உள்ளனர். மேலும் ஈசாக் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை பத்திரிகை நிருபராக பணியாற்றுவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், அவர்களை எங்கள் நீதிபதிகள்தான் தேர்வு செய்வாளர்கள் என்று கூறி அதற்கான விண்ணப்ப மனுவை காண்பித்துள்ளார்.
இதனை நம்பிய ராபின்சன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூன்று பேர் உட்பட மொத்தம் 4 பேரிடம் இருந்து மொத்தம் ₹30 லட்சத்தை பெற்று வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஈசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏமாற்றியுள்ளனர். இதுபற்றி ராபின்சன் நாகர்கோவிலில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ஈசாக், அவரது மனைவி ஜெயராணி மற்றும் மகள்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக 30 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 4 பேர் மீது வழக்கு